யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் ஐப்பசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அங்கிலிக்கன் திருச்சபை அருட்தந்தை அருளம்பலம் ஸ்ரிபன் அவர்கள் கலந்து “அங்கிலிக்கன் திருஅவையில் பொதுநிலையினரின் வகிபாகமும் பணிகளும்” என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
தொடர்ந்து கழக எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக பிரதிநிதிகள், பக்திச்சபை அங்கத்தவர்களென பலரும் கலந்துகொண்டனர்.