பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித பற்றிமா அன்னையின் இறுதி திருக்காட்சி திருவிழா பரிபாலகர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஐப்பசி மாதம் 13ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

10ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ரவிராஜ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப ஆசீர்வாதம் இடம்பெற்றது.

தொடர்ந்து போர்த்துக்கல் நாட்டின் பற்றிமா நகரில் அன்னை மரியாள் காட்சி கொடுத்த திருத்தலத்தின் மரக்கிளையால் செய்யப்பட்ட திருச்செபமாலை, பற்றிமா நகரிலிருந்து கொண்டுவரப்பட்டடு திருத்தலத்தில் வைக்கப்பட்டதுடன் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட திருச்செபமாலை, மெழுகுவர்த்தி கடைகளும், ஆசீர்வாத அறையும் குருமுதல்வரால் ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டன.

By admin