மன்னார் மறைமாவட்ட மடுமாதா சிறிய குடுமட திருவிழா குருமட அதிபர் அருட்தந்தை நெவின்ஸ் யோகராஜ் பீரிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஐப்பசி மாதம் 11ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
தொடர்ந்து கலைநிகழ்வுகளும் குருமட மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களுக்கிடையிலான உதைபந்தாட்ட, கரப்பந்தாட்ட போட்டிகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், நலன்விரும்பிகளென பலரும் கலந்துகொண்டனர்.