ஆயர் தியோகுப்பிள்ளை ஆண்டகை நினைவாக யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆயர் தியோகுப்பிள்ளை அறக்கொடை நினைவு பேருரை ஐப்பசி மாதம் 09ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றிய தலைவர் அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக குழந்தை மருத்துவ இருக்கை பேராசிரியரும் யாழ். போதனா வைத்தியசாலை குழந்தை வைத்திய நிபுணருமான பேராசிரியர் கீதாஞ்சலி சத்தியதாஸ் அவர்கள் கலந்து “வலிமையான தலைமுறைக்கான வழிகாட்டல், பாதுகாப்பு, வாழ்க்கைத்திறன் கல்வி மற்றும் பொற்றோரியம்” என்னும் தலைப்பில் பேருரையாற்றினார்.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், குருக்கள், துறவிகள், குருமட மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தாதிய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

By admin