உரும்பிராய் பங்குமக்களால் முன்னெடுக்கப்பட்ட நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் முப்பொன் விழா சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை உரும்பிராய் புனித மிக்கேல் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் முப்பொன் விழா மலர் வெளியீடும் அடிகளாரின் வாழ்வை சித்தரிக்கும் காணொளி ஆவணப்பட காட்சிப்படுத்தலும் கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், யாழ். பல்கலைக்கழக ஓய்வுநிலை மொழியியல் பேராசிரியர் கலாநிதி சுபதினி ரமேஸ் மற்றும் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை செபமாலை அன்புராசா ஆகியோர் கௌரவ விருத்தினர்களாகவும் கலந்துசிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.
