திருச்சிலுவை கன்னியர் சபை அருட்சகோதரிகளுக்கான நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு நிகழ்வு ஐப்பசி மாதம் 04ஆம் திகதி சனிக்கிழமை ஆனைக்கோட்டை புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் அருட்சகோதரிகள் பீற்றர் சுரேஸ்குமார் பிரியதர்சினி மற்றும் தேவராஜ் குரூஸ் சுஜீவினி ஆகியோர் தமது நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டை நிறைவேற்றினர்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.
