நாவாந்துறை பங்கு மறைக்கல்வி தின சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 05ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புனித நீக்கிலார் ஆலயத்தில் மறைமாவட்ட மறைக்கல்லி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து மாணவர்களின் சந்தை நிகழ்வும் நடைபெற்றன.அத்துடன் அன்றைய நாளை சிறப்பித்து மாலை புனித பரலோக அன்னை ஆலயத்தில் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் மாணவர்களின் நாடகம், நடனம், கிராமிய பாடல் என்பவற்றுடன் மறையாசிரியர்களால் “தற்போது மாணவர்களிடையே மறைக்கல்வியின் ஆர்வம் குறைய காரணம் பெற்றோரின் கவனயீனமா தனியார் கல்வி நிலையங்களின் தலையீடா” என்னும் தலைப்பில் பட்டிமன்றமும் மேடையேற்றப்பட்டதுடன் மறைக்கல்வி தேர்வில் சிறப்பு சித்திபெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும் நடைபெற்றது.
யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் நல்லாயன் கன்னியர் சபை அருட்சகோதரி அனி அவர்கள் கௌரவ விருந்தினராகவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அத்துடன் பங்கின் முதியோர் தின சிறப்பு நிகழ்வும் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் காலை புனித நீக்கிலார் ஆலயத்தில் திருப்பலியும் தொடர்ந்து மாலை பரலோக அன்னை ஆலயத்தில் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. கலைநிகழ்வின் ஆரம்பத்தில் முதியோர் பேரப்பிள்ளைகளால் மாலை அணிவித்து அழைத்துவரப்பட்டு முதியோர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் ஆனைக்கோட்டை பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் அருட்தந்தை தேவசகாயம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
