சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி வார சிறப்பு நிகழ்வுகள் புரட்டாதி மாதம் 22ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை நடைபெற்றன.
பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 22ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் மாணவர்களுக்கான ஒன்றுகூடல், சிரமதானம், விளையாட்டுக்கள், கலைநிகழ்வுகள், திரைப்பட காட்சிப்படுத்தல், அன்பிய திருப்பலி என்பன இடம்பெற்றன.
அத்துடன் மறைக்கல்வி வார சிறப்பு நிகழ்வான கள அனுபவ சுற்றுலாவும் ஐப்பசி மாதம் 06ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
இப்பயணத்தில் மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் புதுக்குடியிருப்பு ஆண்கள் விடுதி, தர்மபுரம் சவேரியார் ஆலயம், அளம்பில் சுவாமிதோட்டம், புலிபாய்ந்தகல் கடற்கரை ஆகியவற்றை பார்வையிட்டதுடன் புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தை தரிசித்து அங்கு இடம்பெற்ற புதுக்குடியிருப்பு பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மறையாசிரியர்களுடனான ஒன்றுகூடலிலும் விளையாட்டு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வுகளில் 60 மாணவர்களும் 15 மறையாசிரியர்களும் பங்குபற்றியிருந்தனர்.

By admin