சில்லாலை பங்கில் முன்னெடுக்கப்பட்ட முதியோர் தின சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 05ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை சில்லாலை புனித கதிரை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாலை திருப்பலியும் தொடர்ந்து முதியோருக்கான கௌரவிப்புக்களும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் சில்லாலை புனித கதிரை அன்னை மற்றும் யாகப்பர் ஆலயத்தை சேர்ந்த 120ற்கும் அதிகமான முதியோர் பங்குபற்றியிருந்தனர்.

By admin