மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மண் அகழ்வு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இதற்கெதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், கத்தோலிக்க மதகுருக்கள் மீது காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்தும் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் முன்னெடுக்கப்பட்ட அமைதி போராட்டம் புரட்டாதி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கட்டைக்காடு பங்குத்தந்தை அருட்தந்தை வசந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அழிக்காதே அழிக்காதே மன்னாரை அழிக்காதே, வேண்டாம் வேண்டாம் காற்றாலை திட்டம் வேண்டாம், அள்ளாதே அள்ளாதே எமது மண்ணை அள்ளாதே போன்ற வாசகங்களை ஏந்தி கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.