யாழ். மறைமாவட்ட மூத்த குருவும் யாழ். புனித மடுத்தினார் சிறிய குருமட ஆன்மீக இயக்குனருமான அருட்தந்தை றெஜி இராஜேஸ்வரன் அவர்களின் குருத்துவ 60ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வு ஐப்பசி மாதம் 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாண்டியன்தாழ்வு புனித அன்னாள் ஆலயத்தில் நடைபெற்றது.

சிறிய குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பாண்டியன்தாழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை நேசராஜா அவர்களின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை றெஜி இராஜேஸ்வரன் அவர்களின் தலைமையில் நன்றி திருப்பலியும் தொடர்ந்து யூபிலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.

யூபிலி நிகழ்வில் அருட்தந்தைக்கான கௌரவிப்புக்கள் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம், மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ, யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்து அருட்தந்தையின் பணிவாழ்விற்காக இறைவனுக்கு நன்றிகூறி செபித்தனர்.

By admin