முல்லைத்தீவு மறைக்கோட்ட மரியாயின் சேனை பிரசீடியங்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட பிரசீடிய விழா புரட்டாதி மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை முல்லைத்தீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மறைக்கோட்ட மரியாயின் சேனை கியூரியா ஆன்ம இயக்குனர் அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து அங்கத்தவர்களுக்கான மகிழ்வூட்டல் நிகழ்வுகளும் நடைபெற்றன.

இம்மகிழ்வூட்டல் நிகழ்வுகளை அருட்தந்தையர்கள் பஸ்ரியன் மற்றும் நரேஸ் ஆகியோர் இணைந்து நெறிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் 130ற்கும் அதிகமான மரியாயின் சேனை அங்கத்தவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

 

By admin