கொழும்பு உயர் மறைமாவட்டத்தால் வெளியிடப்படும் தமிழ் கத்தோலிக்க வெளியீடான ஞானஒளி பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டதன் 15ஆவது ஆண்டு சிறப்பு நிகழ்வு புரட்டாதி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு செக்கட்டித்தெரு வேளாங்கண்ணி அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து பத்திரிகை எழுத்தாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கௌரவிப்பும் நடைபெற்றன.
திருப்பலியை கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் எழுத்தாளர்களான யாழ். மறைமாவட்ட குருவும் முழங்காவில் பங்குத்தந்தையுமான அருட்தந்தை அன்ரனிபாலா, டிலாசால் சபை அருட்சகோதரர் ஜெயகாந்தன், பேராசிரியர் யோகராஜா மற்றும் பணியாளர்களான சாந்தி பெனடிக்ரா கூஞ்ஞ மற்றும் செரோஸினி சேவியர் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.