கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் விசேட தேவையுடைய பிள்ளைகள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களை வலுவூட்டல் செயற்றிட்டத்தின் கீழ் விசேட தேவையுடைய பிள்ளைகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட மகிழ்வூட்டல் ஒருங்கிணைப்பு செயற்பாடு புரட்டாதி மாதம் 27, 29, 30ஆம் திகதிகளில் புதுக்குடியிருப்பு, பூநகரி, கண்டாவளை பிரதேசங்களில் நடைபெற்றது.
நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான விளையாட்டுக்கள், மகிழ்வூட்டல் செயற்பாடுகள், பரிசளிப்பு என்பவற்றுடன் பிள்ளைகளின் பாதுகாவலர் மற்றும் பெற்றோருக்கான விழிப்புணர்வு கருத்தமர்வும் நடைபெற்றன.
இக்கருத்தமர்வை செயற்றிட்ட திட்ட இணைப்பாளர் நூர்தர்சினி அவர்கள் நெறிப்படுத்தினார்.
இந்நிகழ்விற்கான நிதியனுசரணையை அனைத்துலக மருத்துவநல அமைப்பு IMHO வழங்கியிருந்தது.