இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட மகாவித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச சிறுவர் தினம் மற்றும் வாணிவிழா நிகழ்வுகள் ஜப்பசி மாதம் 01ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்சகோதரி அமிர்தா அன்ரன் தேவதாஸன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களுக்கான விளையாட்டுக்கள், மகிழ்வூட்டல் செயற்பாடுகள், கலைநிகழ்வுகள் என்பவற்றுடன் தரம் 1,2 மாணவர்களின் போலச்செய்தலும் நடைபெற்றன.
அத்துடன் அன்றைய தினம் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திறன் வகுப்பறையும் பிரதம விருந்தினர் அகில இலங்கை சமாதான நீதவானும் காணலயா இயக்குநருமான திருமதி விஜயராகவன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டதுடன் சிறப்பு விருந்தினர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ரமேஸ் அவர்களால் ஆசிச்செய்தியும் வழங்கிவைக்கப்பட்டது.