யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை டினுசன் பியூமால் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
25ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 27ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை செபமாலை அன்புராசா அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.