சுன்னாகம் பங்கின் கட்டுவன் புனித பத்தாம் பத்திநாதர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
19ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 20ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களும் நற்கருணை விழா திருப்பலியை யாழ். புனித பத்திரியார் கல்லூரி நிதி முகாமையாளர் அருட்தந்தை றெக்சன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலி நிறைவில் ஆலய வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட புனித பற்றிமா அன்னையின் வரவேற்பு திருச்சொருபமும் பங்குத்தந்தை அவர்களால் ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டது.