சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் கிளிநொச்சி பகுதியில் கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தால் காலநிலை விவசாய பசுமைத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் புரட்டாதி மாதம் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இவ் ஆரம்ப நிகழ்வில் மாதிரி விவசாய பண்ணை ஆரம்பித்து வைக்கப்பட்டு அதில் நீண்ட, குறுகிய மற்றும் நடுத்தர கால பயன்தரும் மரக்கன்றுகளும் நாட்டிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் நிர்வாக அலுவலர்கள், விவசாய போதனாசிரியர் மற்றும் திட்டத்தின் விவசாய பயனாளிகள் கலந்துகொண்டனர்.