இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட மகாவித்தியாலய வருடாந்த பரிசளிப்புவிழா புரட்டாதி மாதம் 17ஆம் திகதி கடந்த புதன்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அருட்சகோதரி அமிர்தா அன்ரன் தேவதாஸன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 2024ஆம் கல்வி ஆண்டில் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சிறந்த முறையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.

சட்டத்தரணியும் பாடசாலையின் பழைய மாணவியுமாகிய செல்வி செறின் சேவியர் அவர்கள் பிரதம விருந்தினராகவும் வலிகாக கல்வி வலய கல்வி நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர் திரு. சிவநேசன் மற்றும் பாடசாலையின் பழைய மாணவி அருட்சகோதரி ஜக்குலின் விஜயா யோசப் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பெற்றோர்கள், பழைய மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin