முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கப்புச்சியன் அருட்தந்தையர்களால் நடாத்தப்படு Capital Campus இல் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பவியல் கற்கைநெறியை நிறைவுசெய்த மாணவர்களுக்கான NVQ3 தர இறுதித்தேர்வு புரட்டாதி மாதம் 12ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப்பரீட்சைக்கு 16 மாணவர்கள் தோற்றி அனைவரும் சித்தியடைந்துள்ளனர்.
அத்துடன் Capital Campus இன் புதிய கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக இயக்குநர் அருட்தந்தை டேவிட் டொமினிக் அவர்கள் தெரிவித்துள்ளார்.