மாணவர்களின் விற்றல் வாங்கல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் முகமாக மன்னார் மறைமாவட்டம் வவுனியா புனித ஆறாம் பவுல் ஆங்கில பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு புரட்டாதி மாதம் 18, 19ஆம் திகதிகளில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அருட்தந்தை அருட்குமரன் அவர்களின் தலைமையில் உதவி அதிபர் அருட்தந்தை விமல்றோய் அவர்களின் உதவியுடன் நடைபெற்ற இச்சந்தை நிகழ்வின் முதல்நாள் நிகழ்வை பாலர் பாடசாலை மாணவர்களும் இரண்டாம் நாள் நிகழ்வை ஆரம்ப பிரிவு மாணவர்களும் முன்னெடுத்தனர்.

முதல்நாளன்று வவுனியா தெற்கு வலய கல்வி அபிவிருத்திக்குரிய பிரதிக்கல்வி பணிப்பாளர் திரு. போல் அமல்ராஜ் அவர்களும் இரண்டாவது நாள் வவுனியா உதவி பிரதேச செயலாளர் திருமதி. உமாநந்தினி புவனராஜன் அவர்களும் பிரதம விருந்தினர்களாக கலந்து சந்தை நிகழ்வை ஆரம்பித்துவைத்தனர்.

இந்நிகழ்வில் வவுனியா மறைக்கோட்ட முதல்வரும் வேப்பங்குளம் பங்குத்தந்தையுமான அருட்தந்தை டெஸ்மன் ஆஞ்சலோ, மதவுவைத்தகுளம் செபமாலைதாசர் சபை குழும தலைவர் அருட்தந்தை நிர்மலராஜ், அருட்சகோதரிகள், ஆசிரியர்கள், பெற்றோர், நலன்விரும்பிகளென பலரும் கலந்துகொண்டனர்.

By admin