மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல வருடாந்த திருவிழா திருத்தல நிர்வாகி அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 14ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

5ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 13ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை இருதயபுரம் பங்குத்தந்தையும் மறைமாவட்ட சமூகதொடர்பு ஆணைக்குழு இயக்குநருமான அருட்தந்தை கிளமென்ட் அன்னதாஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

திருவிழா திருப்பலி நிறைவில் திருச்சிலுவை பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது திருச்சிலுவை ஆலயம் இது என்பதுடன் இயேசு அறையப்பட்ட திருச்சிலுவையின் ஒரு பகுதி இந்தியா நாட்டின் கோவை நகரிலிருந்து எடுத்துவரப்பட்டு திருத்தலத்தில் வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin