இலங்கை தேசிய கல்வி நிறுவகமும் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களமும் இணைந்து முன்னெடுத்த வடக்கு கிழக்கு மாகாண பாடசாலைகளின் கத்தோலிக்க பாட ஆசிரியர்களுக்கான புதிய பாடத்திட்டம் தொடர்பான கருத்தமர்வு புரட்டாதி மாதம் 10ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

தேசிய கல்வி நிறுவக கிறிஸ்தவ பாட இணைப்பாளர் அருட்தந்தை மால் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதிய பாடத்திட்டம் தொடர்பான கருத்தமர்வு, கருத்துரைகள், குழு ஆய்வுகள், குழுச்செயற்பாடுகள், விளக்கவுரைகள் என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வில் 65ற்கும் அதிகமான ஆசிரியர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin