முல்லைத்தீவு மறைக்கோட்ட பீடப்பணியாளர்களுக்கான ஒன்றுகூடல் புரட்டாதி மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகி 14ஆம் திகதி வரை மாங்குளம் டொண்பொஸ்கோ சிறிய குருமடத்தில் நடைபெற்றது.
மறைக்கோட்ட பீடப்பணியாளர் இணைப்பாளர் அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலி, நற்கருணை வழிபாடு, திரைப்பட காட்சிப்படுத்தல், விளையாட்டுக்கள், உதவுமுறை பயிற்சி, தீப்பாசறை, மகிழ்வூட்டல் நிகழ்வுகள், அருட்தந்தை விஜேந்திரன் தலைமையிலான குழுவினரின் தலைமைத்துவ பயிற்சி, கருத்துரைகள், அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் புனித கார்லோ அக்குட்டீஸ் பற்றிய கருத்தமர்வு என்பவற்றுடன் சிறப்பு நிகழ்வாக யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட மாணவர்களின் “வந்து பாருங்கள்” இறையழைத்தல் நிகழ்வும் இடம்பெற்றன.
இவ் இறையழைத்தல் நிகழ்வில் குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் மற்றும் 12 குருமட மாணவர்கள் இணைந்து குறுநாடகம், பாடல், குழுச்செயற்பாடுகள் ஊடாக பீட்ப்பணியாளர்ளை வழிப்படுத்தினர்.
மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த 125 பீடப்பணியாளர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றி பயனடைந்தனர்.