கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் கீழ் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இயங்கும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வதிவிட பயிற்சி புரட்டாதி மாதம் 05,06ஆம் திகதிகளில் வன்னி கியூடெக் நிறுவன மண்டபத்தில் நடைபெற்றது.

நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிள்ளையின் விருத்தி படிநிலையும்; போசாக்கும், விளையாடுவோம் கற்போம் செயற்பாடு, தொடர்பாடலும் அணுகுமுறையும், அழகியல் செயற்பாடுகள் போன்ற தலைப்புக்களில் ஆசிரியர்களுக்கு கருத்துரைகளும், பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் 43 ஆசிரியர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

இந்நிகழ்விற்கான நிதியனுசரணையை நெதர்லாந்து நாட்டின் ACNS நிறுவனம் வழங்கியிருந்ததுடன் போரின் பின்னரான மீள்குடியேற்ற காலத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முன்பள்ளி பிள்ளைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தினால் 17 முன்பள்ளிகள் புதிதாக அமைத்துக் கொடுக்கப்பட்டதுடன் 03 முன்பள்ளிகள் புனரமைப்பு செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin