முல்லைத்தீவு உப்புமாவெளி அளம்பில் சுவாமிதோட்ட பகுதியில் இயங்கிவந்த லதனி சிறுவர் இல்லத்தை விசேட தேவையுடையோருக்கான இல்லமாக மாற்றும் நிகழ்வு லதனி நிறுவன இயக்குநரும் நிறுவுனருமான அருட்தந்தை நெவில் கூஞ்ஞே அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 11ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் வதிவிடம், கற்றல் மற்றும் வாழ்வாதார முயற்சிகள் குறித்த பயிற்சிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் திருமதி மஞ்சுளாதேவி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் மற்றும் மறைக்கோட்ட அருட்தந்தையர்களும் கலந்துகொண்டனர்.