மானிப்பாய் பங்கின் ஆலடி கிராமத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள புனித யோசேப்பு ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 08ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
ஆலயத்திற்கான அடிக்கல்லை பங்குத்தந்தை அவர்கள் நாட்டிவைத்ததுடன் இந்நிகழ்வில் மல்வம் – உடுவில் பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன், தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர், பணியாளர்கள், பங்குமக்கள், அயற் பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.
15 பேரை மட்டுமே உள்ளடக்கக்கூடியதாக தற்போது அமைந்துள்ள சிறிய ஆலயத்தில் வழிபாடுகளின் போது குறிப்பாக மழைகாலங்களில் இறைமக்கள் அதிகளவான இடர்பாடுகளை சந்திப்பதனால் இவற்றை நிவர்த்தி செய்யும் முகமாக இப்புதிய ஆலயம் அமைக்கப்படவுள்ளதாகவும் இவ்வாலயத்திற்கென ஒருசில குடும்பங்கள் மட்டுமே உள்ளபடியால் கட்டுமானப்பணிகளை முன்னெடுப்பதற்கான நிதியனுசரணையை இப்பிரதேச மக்கள் நல்உள்ளம் கொண்டவர்களிடம் எதிர்ப்பார்த்து நிற்பதாகவும் பங்குத்தந்தை அவர்கள் தெரிவித்துள்ளார்.