திருப்பாலத்துவ சபை மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு புரட்டாதி மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை சில்லாலை புனித கதிரை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட திருப்பாலத்துவ சபை இயக்குனர் அருட்தந்தை எயின்சிலி றொசான் அவர்களின் தலைமையில் திருப்பலியும் 77 பிள்ளைகளுக்கான சின்னம்சூட்டும் நிகழ்வும் இடம்பெற்றன.
தொடர்ந்து ஆலய டெய்சி மண்டபத்தில் அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் கிராமிய நடனம், ஒயிலாட்டம், கோலாட்டம், செம்பு நடனம், ஆங்கில உரையாடல், கவிதை, ஆங்கில குழுப்பாடல் போன்ற கலைநிகழ்வுகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் இளவாலை மறைக்கோட்ட திருப்பாலத்துவ சபை இணைப்பாளர் அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் மற்றும் அருட்சகோதரிகள், மறையாசிரியர்கள், பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.