மல்லாவி பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ பயணம் புரட்டாதி மாதம் 5,6,7ஆம் திகதிகளில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை நியூமன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களும் ஆசிரியர்களும் அனுராதபுரம், மிகிந்தல, தம்புள்ள, கண்டி தலதா மாளிகை, பேராதனை உயிரியல் பூங்கா ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் 66 மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.
இந்நிகழ்விற்கான நிதியனுசரணையை One Child Foundation அமைப்பு வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.