யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் குழுமத்தின் மறைபரப்பு சபை பொதுநிலையினருக்கான எழுச்சிநாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மன்னார் மறைமாவட்டங்களில் நடைபெற்றன.
சபை பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை யூட் கரோவ் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண மறைமாவட்டத்தில் ஆவணி மாதம் 29,30,31ஆம் திகதிகளிலும் மன்னார் மறைமாவட்டத்தில் புரட்டாதி மாதம் 5,6,7ம் திகதிகளில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் இல்ல தரிசிப்புக்கள் இடம்பெற்றதுடன் இவ் இல்ல திரிசிப்புக்களை உயர் குருமட அருட்சகோதரர்கள் மேற்கொண்டனர்.
இறுதிநாள் நிகழ்வுகள் கோப்பாய் சங்கமத்திலும் மன்னார் திருப்புமுனையிலும் நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் பொதுநிலையினருக்கான மாநாடு, கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், என்பவை இடம்பெற்றதுடன் அருட்தந்தை யூட் கரோவ் அவர்களால் எழுதி இசையமைக்கப்பட்ட பொதுநிலையினர் கீதமும், பொதுநிலையினருக்கான யாப்புக்கள், கட்டதிட்டங்கள், பணிகள், மற்றும் செபங்களை உள்ளடக்கிய கைந்நூலும் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் 200ற்கும் அதிகமான பொதுநிலையினர் பங்குபற்றியிருந்தனர்.