அக்கராயன்குளம் புனித வேளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை சேகர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 8ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

ஆவணி மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை யூட் கரோவ் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை கிளிநொச்சி அன்னை இல்ல இயக்குநர் அருட்தந்தை தயா பெரேரா அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin