செபமாலைதாசர் சபை அருட்தந்தை மனுவேல் சவிரிமுத்து அவர்கள் புரட்டாதி மாதம் 09ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.
தீவகம், நெடுந்தீவு பங்கை பிறப்பிடமாக கொண்ட இவர் 1982ஆம் ஆண்டு செபமாலைதாசர் சபையில் இணைந்து 1990ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு நீர்கொழுப்பு கொச்சிக்கடை, இரத்தினபுரி பஞ்சந்தன்ன, வவுனியா செபமாலை மாதா ஆச்சிரமம், அச்சுவேலி தோலகட்டி ஆச்சிரமம், மிருசுவில் செபமாலைதாசர் மாகாண இல்லம், யாழ்ப்பாணம் அருள் ஆச்சிரமம் ஆகிய இடங்களில் பணியாற்றியுள்ளார்.
இவரின் பணிவாழ்விற்காக இறைவனுக்கு நன்றிகூறி இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.