பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சிநாள் புரட்டாதி மாதம் 6ஆம் திகதி சனிக்கிழமை மிருசுவில் புனித நீக்கிலார் ஆலயத்தில் நடைபெற்றது.
கழக இயக்குனர் அருட்தந்தை S.J.Q ஜெயறஞ்சன் அவர்களின் தலைமையில் “சுற்றுப்புறச் சூழல் மேம்படுத்தலும் ஆன்மீக ஆழப்படுத்தலும்” என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் நீண்ட காலமாக மறைக்கோட்ட பங்குகளில் பணியாற்றிய பொதுநிலை பணியாளர்களுக்கான கௌரவிப்புக்களும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் கிளிநொச்சி தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களப் பொறுப்பதிகாரி திரு. அன்ரன் கமிலஸ் அவர்களின் எழுச்சிநாள் மையக்கரு தொடர்பான கருத்துரையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அகவொளி குடும்ப நல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்கள் பிரதம விருத்தினராகவும் பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை கிருபாகரன் அவர்கள் சிறப்பு விருத்தினராகவும் யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு செயலாளர் திரு. அலெக்ஸ் அமலரட்ணம் மற்றும் மிருசுவில் றோ.க.த.க பாடசாலை அதிபர் திருமதி இராதிகா லெனாட் இந்திக ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.