நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் 150ஆவது ஆண்டை முன்னிட்டு அவர் தமிழுக்கும் மறைக்கும் ஆற்றிய பணியை வெளிக்கொணரும் நோக்கில் பல சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும்நிலையில் இதன் ஒரு அங்கமாக பாடசாலை மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி ஆவணி மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

யாழ்ப்பாண தமிழ்ச்சங்கம், யாழ். மறைமாவட்டம், யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் ஆகியோரின் இணைந்த ஏற்பாட்டில் வட மாகாண கல்வி திணைக்களத்தின் உதவியுடன் 4 நிலையங்களில் நடைபெற்ற இப்போட்டியில் 70ற்கும் அதிகமான மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin