இறை அழைத்தலை ஊக்குவிக்கும் முகமாக சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய பீடப்பணியாளர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட ஒன்றுகூடலும் கருத்தமர்வும் புரட்டாதி மாதம் 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை யூட் கரோவ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தமர்வை அமலமரித்தியாகிகள் சபை அருட்சகோதரர்கள் இணைந்து நெறிப்படுத்தியிருந்தார்கள்.
இந்நிகழ்வில் கருத்துரைகள், குழுச்செயற்பாடுகள் என்பன இடம்பெற்றதுடன் 25 பீடப்பணியாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.