புங்குடுதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய மாத இறுதிநாள் சிறப்பு நிகழ்வு ஆவணி மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்சகோதரர்கள் ஹிலன ரஸ்மிக்க பெரேரா மற்றும் ஆனந்தராஜ் அவர்களின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்பிய ரீதியான கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அன்பிய மாத விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் தீவக மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்;கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
இவ்அன்பியமாத சிறப்பு நிகழ்வுகள் யூலை மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகி அங்கு நடைபெற்றுவந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.