இரணைப்பாலை வலையன்மடம் புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 31ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
22ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 30ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றதுடன் அன்றைய தினம் மாலை ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

