கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு ஆவணி மாதம் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி அதிபர் திரு. ரவீந்திரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உதவி அதிபர் திரு. சிவாஞ்சநேயன் மற்றும் அருட்சகோதரி பிரபாஜினி பிரான்சிஸ் ஆகியோரின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் மற்றும் யாழ். திருமறைக்கலாமன்ற கலைஞர் திரு. ஜெகன் கரன்சன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கருத்துரைகள், விளையாட்டுக்கள், குழுச்செயற்பாடுகள், தலைமைத்துவ பயிற்சிகள் ஊடாக மாணவர்களை வழிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் 25 வரையான மாணவத்தலைவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.