சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட பிப்லோஸ் தியானம் ஆவணி மாதம் 16ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இத்தியானத்தை, சென்னை அம்புத்தூர் அருளாலயம் தியான மைய இயக்குநர் அருட்தந்தை இராபேல் கூத்தூர் அவர்கள் தனது குழுவினருடன் இணைந்து, நற்கருணை ஆராதனை, திருப்பலி, இறைவார்த்தை வழிபாடு, ஒப்புரவு அருட்சாதனம் விவிலிய காடு, குணமளிக்கும் அருட்சாதனம் மற்றும் குணமளிக்கும் நற்கருணை வழிபாடு என்பவற்றின் ஊடாக நெறிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும் இணைந்து பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.