கொய்யாத்தோட்டம் மற்றும் தாழையடி – செம்பியன்பற்று பங்குகளின் மறைக்கல்வி மாணவர்கள் இணைந்து முன்னெடுத்த ஒன்றுகூடல் நிகழ்வு ஆவணி மாதம் 17ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை செம்பியன்பற்று, குடாரப்பு புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.

தாழையடி – செம்பியன்பற்று பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருச்சிலுவை கன்னியர் சபை அருட்சகோதரிகள் றெபேக்கா மற்றும் எல்சி அகியோர் கலந்து விளையாட்டுக்கள், மகிழ்வூட்டல் செயற்பாடுகள், குழுச்செயற்பாடுகள், கருத்துரைகள் ஊடாக மாணவர்களை வழிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் 60 வரையான மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin