வளலாய் புனித மடுமாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 20ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
11ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை சந்திரதாஸ் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை ஒட்டகப்புலம் பங்குத்தந்தை அருட்தந்தை அருள்தாசன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.