இந்தியாவிலிருந்து வருகைதந்து யாழ். மறைமாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குறைந்த பிள்ளைகளுக்கான பணிகளை ஆரம்பிக்கவுள்ள அன்பின் பணியாளர்கள் குவனேலியன்ஸ் சபை அருட்தந்தையர்களின் பணித்தளத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிளிநொச்சி விவேகானந்தநகரில் அமையவுள்ள இப்பணித்தளத்திற்கான அடிக்கல்லை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் நாட்டிவைத்தார்.

குவனேலியன்ஸ் சபை துணை தலைவர் அருட்தந்தை சூசை இரத்தினம் அவர்கள் யாழ். மறைமாவட்டத்தில் தங்கள் பணிகளை தொடங்குவதற்கான ஒப்புதலை இந்நிகழ்வில் வழங்கிவைத்தார்.

கிளிநொச்சி மறைக்கோட்டத்தில் பணியாற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பங்குமக்கள் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.

By admin