இந்தியாவிலிருந்து வருகைதந்து யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றவுள்ள அன்பின் பணியாளர்கள் சபை அருட்தந்தையர்கள் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களை உத்தியோகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில் சபை துணை தலைவர் அருட்தந்தை சூசை இரத்தினம், மாகாண முதல்வர் அருட்தந்தை ஞானராஜ், மாகாண துணை தலைவர் அருட்தந்தை அமல்ராஜ், மற்றும் அருட்தந்தையர்கள் ஜோன் போல், பிலோமின் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.