கொக்கிளாய் பங்கின் பங்குத்தந்தையாக அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜேக்கப் ஜோகராஜ் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களால் நியமனம்பெற்று தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
பணிப்பெறுப்பேற்கும் நிகழ்வு கொக்கிளாய் புனித சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருப்பலியில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் முன்னிலையில் இடம்பெற்றது.