பதுளை மறைமாவட்ட புனித எய்மர்ட் சிறிய குருமட புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

குருமட அதிபர் அருட்தந்தை மொடஸ்ரஸ் பெர்னாண்டோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட் நிஸாந்த சில்வா அவர்கள் கலந்து புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.

மேலும், பதுளை மறைமாவட்ட வெள்ளவாய புனித மரியாள் ஆலயத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட பங்குகளுக்கிடையிலான துடுப்பந்தாட்ட போட்டி ஆகஸ்ட் மாதம் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ச் கிறிஸ்ரோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்டத்தின் பங்குகளின் 20 அணிகள் பங்குபற்றியதுடன் பசற பங்கு வெற்றிக்கிண்ணத்தையும் கைப்பற்றியது.

இந்நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட் நிஸாந்த சில்வா அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin