மறைமாவட்ட குருக்களின் பாதுகாவலர் புனித ஜோன் மரிய வியான்னி அவர்களின் திருநாளில் யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தினால் மறைமாவட்ட குருக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

ஒன்றிய தலைவர் அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து சிறப்புரையும், ஒன்றுகூடலும் இடம்பெற்றன.

ஆயர் இல்ல சிற்றாலயத்தில் நடைபெற்ற திருப்பலியை இவ்வருடம் திருநிலைப்படுத்தப்பட்ட குருக்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர். திருப்பலி நிறைவில் ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் குருக்களுக்கான சிறப்புரையும் கூட்டமும் இடம்பெற்றன.

சிறப்புரையை யாழ். பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை விரிவுரையாளர்களான திரு. சியாமளன் மற்றம் திரு. கோகுல் ஆகியோர் “செயற்கை நுண்ணறிவின் நன்மை தீமைகள்” என்னும் தலைப்பில் வழங்கியிருந்தனர்.

இந்நிகழ்வில் 75ற்கும் அதிகமான குருக்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin