யாழ். மறைமாவட்ட மூத்த குரு அருட்தந்தை இருதயதாஸ் அவர்களின் குருத்துவ 50ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி சனிக்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.
குருநகர் பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை இருதயதாஸ் அவர்களின் தலைமையில் நன்றி திருப்பலியும் தொடர்ந்து யூபிலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.
யூபிலி நிகழ்வில் அருட்தந்தைக்கான கௌரவிப்புக்கள் நடைபெற்றதுடன் அருட்தந்தையின் குருத்துவ யூபிலிதினத்தை நினைவுகூர்ந்து “ஆண்டவரின் தாசன்” பொன்விழா மலரும் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம், ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ, யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்து அருட்தந்தையின் பணிவாழ்விற்காக இறைவனுக்கு நன்றிகூறி செபித்தனர்.