யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலய பாலர் பாடசாலை சிறார்களின் விளையாட்டு போட்டி ஆகஸ்ட் மாதம் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை பேராலய வளாகத்தில் நடைபெற்றது.

முள்பள்ளி பொறுப்பாசிரியர் திருமதி. நிலான்குமார் தமிழ்ச்செல்வி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் காப்பாளர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் தடகள விளையாட்டுக்கள், உடற்பயிற்சி, வினோத உடை என்பவற்றுடன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை றெஜி இராஜேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ் பிரதேச சமூக வைத்திய அதிகாரி வைத்தியர் திருநாவுக்கரசு ராகுலன் மற்றும் யாழ். பிராந்திய முன்பள்ளிகளின் இணைப்பாளர் செல்வி புனிதசீலன் தர்சினி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

By admin