யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் அமைந்துள்ள சுபீட்சம் அறக்கொடை நிதியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கான மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு யூலை மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சுபீட்சம் அறக்கொடை நிதிய ஸ்தாபக தலைவர் திரு. யேசுதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில் 10 பயனாளிகளுக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்விற்கான நிதியனுசரணையை பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் திரு. றெக்சன் அவர்கள் தனது தந்தை அமரர் பிரான்சிஸ் அவர்களின் நினைவாக வழங்கியிருந்தார்.