அமலமரியின் கிளறேசியன் துறவற சபை அருட்சகோதரிகளுக்கான நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு, ராஜகிரிய திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்றது.

இலங்கை கிளறேசியன் சபை புனித யோசேவ்வாஸ் மாநில தலைமைப் பொறுப்பாளர் அருட்தந்தை ஜோசப் ஜெயசீலன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் மன்னார் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்சகோதரிகள் இருதயநாதன் நான்சி குருஸ், செபமாலை லெம்பேட் ஜெயநாயகி, யாழ்ப்பாண மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்சகோதரிகள் ஜேசுதாசன் பிகிறாடோ லூட்ஸ் டயோலா, விஜினி மேரி சவிரிமுத்து மற்றும் பதுளை மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்சகோதரி சாந்தி மைக்கல் ஆகியோர் தமது நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டை நிறைவேற்றினர்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துசெபித்தனர்.

By admin